உண்மைக்கதை 01

கிரேக்க நாட்டுப் பெண்களிலேயே பேரழகியாகப் போற்றப்படுபவள் இளவரசியான அட்லாண்டா என்பவள். கிரேக்கப் புராணங்களின்படி அவள் பெரும் ஆற்றல் பெற்றிருந்தாள் எனக் கூறப்படுகிறது. இவளது தந்தை தனக்கு ஆண் மகன் பிறக்க வேண்டுமென மிகுந்த ஆசையோடிருந்தான்

. தந்தைக்கு ஏமாற்றத்தைத் தந்து பெண்ணாகப் பிறந்த அட்லாண்டா, பிறந்ததும் மலையிலே கொண்டு சென்று விடப்பட்டாள். அங்கே அவள் பெண் கரடி ஒன்றால் வளர்க்கப் பெற்றாள்.

காட்டிற்கு வேட்டையாட வந்த சிலர் குழந்தையைக் கண்டு, தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.
அட்லாண்டா பெரியவளாக வளர்ந்தபின், தனது தந்தையின் அவைக்களத்தை அடைந்தாள். அரசனுக்கு வேறு சந்ததி எதுவும் இல்லாமையால் மீண்டும் ஏற்றுக் கொண்டதுடன் திருமணத் திற்கும் ஏற்பாடு செய்தான்.

அழகில் சிறந்து விளங்கிய அட்லாண்டாவை மணக்கப் பல இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் வந்தனர். ஆனால், அட்லாண்டா தன்னை ஓட்டப் பந்தயத்தில் வெல்பவனையே திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தாள்.

அந்தப் போட்டியில் கலந்து கொண்டு தோல்வியடைவோர் தங்கள் உயிரையும் இழக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்தாள். அவளது அழகில் மனதைப் பறி கொடுத்த இளைஞர் பலர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள முன்வந்து தோல்வி கண்டு உயிரையும் இழந்தனர்.

கடைசியாக வீனஸ் என்ற பெண் தெய்வத்தின் அருள் பெற்ற ஒருவன் அட்லாண்டாவுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வதாக அறிவித்தான். போட்டியும் தொடங்கியது. அட்லாண்டாவும் அந்த இளைஞனும் ஓடத் தொடங்கினர். வழக்கம் போலவே அட்லாண்டா முன்னே ஓடிக் கொண்டிருந்தாள்.

அந்த வேளையில் அவளுக்கு முன் ஒரு பொன்னாலான ஆப்பிள் பழம் உருண்டு செல்வதைக் கண்டாள். அப்பொற்கனியைக் கண்ட அட்லாண்டாவுக்கு அதன் மீது ஆசை உண்டாயிற்று. ஓடுவதை நிறுத்திவிட்டுக் கனியைக் குனிந்தெடுத்தாள். அட்லாண்டா கனியை எடுக்கக் குனிந்தபோது இளைஞன் முந்திச் சென்றானாயினும் மறுபடியும் அவளே முந்தி ஓடினாள்.

அட்லாண்டாவின் முன்பு இன்னொரு பொற்கனியும் உருண்டது. அதையும் அவள் எடுத்தாள். பந்தயம் முடியும் தறுவாயில் மீண்டுமொரு கனி உருண்டு வந்தது. அதையும் அவளால் விட மனம் வரவில்லை. ஆனால், மூன்றாவது கனியை எடுக்க அவள் முனைந்த வேளையில் பந்தயம் இறுதிக் கட்டத்தில் இருந்தது. ஆகவே, இளைஞன் முந்தி ஓடிப் பந்தயத்தில் வெற்றி கண்டான்.

இந்த மூன்று பொற்கனிகளையும் உருட்டி விட்டவன் அந்த இளைஞனே தான். அவை, வீனஸ் பெண் தெய்வத்தால் அவனுக்கு அளிக்கப்பட்டவை. ஓட்டப் பந்தயத்தில் தன்னை வெற்றி கண்ட அட்லாண்டா தனது அறிவிப்பின்படி அந்த இளைஞனையதிருமணம் செய்து கொண்டாள்.

நன்றி தினமலர்!
நன்றி நிலாமுற்றம்

எழுதியவர் : கே இனியவன் (29-Aug-13, 3:46 pm)
பார்வை : 238

மேலே