மனம் வலித்தது.....
மாதக்கடைசியில்
அப்பா இருமினார்
பணம் இல்லாமல்
கையை பிசைந்தபடி நின்றேன்
புரிந்துகொண்டு அப்பா சொன்னார்
அடுத்த வாரம் பாத்துக்கலாம்பா........
அன்று மாலையில்
பள்ளியில் இருந்து
திரும்பிய மகன் இருமினான்
கடன் வாங்கிக் கொண்டு
மருத்துவமனை புறப்பட்டேன்
அப்பா சிரித்தார்
மனம் வலித்தது.......................................