நட்பு

சர்க்கரை வார்த்தை பேசி
சந்திப்பில் உண்டான நட்பு
நிஜமான நட்பு என்று
ஏமாந்த மனது எனது

காலம் நேரம் எல்லாம்
கடந்ததுதானே நட்பு
யாரோ போல் பழக எதற்கு
நட்பு என்னும் நடிப்பு

இஷ்டமில்லை என்றால்
எடுத்துரைத்தால் போதும்
இன்முகதுடனே நானே விலகி கொள்வேன்
பகிரதானே நண்பன் என்று எண்ணி
என் இன்பம் துன்பம் பகிர்ந்தேன்

துன்பம் என்றபோது தொலைத்தான்
எனது நட்பை

எதிரி என்று சொல்லு
என் வீட்டில் இடம் தருவேன்
நட்பென்று சொல்லி
நெஞ்சில் விசத்தை கலக்காதே

தாயிடம் கூட மறைப்பேன்
நண்பன் கேட்டால் உரைப்பேன்
நட்பில் தாய்மை தேடி திரிந்து
தாய்போல மதிப்பேன்
நட்பை நான் மதிப்பேன்

எழுதியவர் : ருத்ரன் (30-Aug-13, 9:50 pm)
Tanglish : natpu
பார்வை : 74

மேலே