பெண்,
உள்ளதிற்குள்ளே ஆயிரம் போராட்டம்,
நெஞ்சை அழுத்திக்கொண்டு பாரமாய்,
யாரிடமும் சொல்ல முடியாமல்,
புன்னகையால் மறைத்துக் கொண்டு,
போலியாக வாழவில்லை, தோல்வியாய் வாழ்கிறாள்,பெண்,
மனத்தின் ரணத்தை மேன்மேலும் அதிகமாக்க,
பணிந்து, தணிந்து போக வேண்டும்,என்றே,
சொல்லப பட்டோம், வளர்க்கப் பட்டோம்,
எதிர்பார்க்கப் பட்டோம்,
எதிர்ச் சொல் ஒன்று பேசினால்,
அவள் அடங்காப்பிடாரி,திமிர் பிடித்தவள்,
ஆமாம் என்று தலை ஆட்டினால்,
அவளை, யாருக்கும் பிடிக்கும்,
அவளுக்கென்று உணர்ச்சிகள் இருக்கக் கூடாதா?
அவை வெளிபடுத்தாவிட்டால்,அவள்
கல்லாகி விடுவாள்.