தங்க ரதம்
![](https://eluthu.com/images/loading.gif)
தங்க ரதம்போல் நீ அசைந்து, அசைந்து வர,
வெள்ளிச் சலங்கைகள் குலுங்கிக் குலுங்கி நடமிட,
பட்டிளம் மேனி தக,தகக்க, கண் மூடி நீ மயக்க,
முத்து உதிர்ந்தது போல் நீ சப்தமிட்டு சிரிக்க,
உன் கண்களில் இருந்து மின்னல் ஒளிக் கீற்றாய் பாய,
உன் பட்டுக் கன்னங்கள் என்னைக் கிள்ளேன்,என்று கூப்பிட,
உன் கன்னத்துக் குழி அழகு, உன் கள்ளமில்லாச் சிரிப்பு,
உன் நீட்டிய கரங்களை அள்ளி அணைத்து,
குழந்தையுடன் குழந்தையாய் நாமும்.