கவிதைக் குழந்தை

கனவொன்று கவிதையாய் உருவெடுக்க,
கவிதைக்குள் கருவொன்று அமர்ந்துகொள்ள,

அமர்ந்திருந்த கருவுமே பிறப்பெடுக்க
பிறப்புக்கு நல்லதோர் பெயரிட

பெயரிட்ட பிறப்பையும் பிறருவக்க (பிறர் உவக்க)
நண்பர்கள் மத்தியில் உலவவிட

எழுத்திணைய
நண்பர்கள் மத்தியில் உலவிட

எம்முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி
என்நண்பர்கள்
கருத்தில்தான் எத்தனை குளிர்ச்சி

எப்பொழுதும் அவரவர்குழந்தைகள், அவரவர்க்கு மகிழ்ச்சி
ஆனால் இங்கேயோ,
அவரது குழந்தைகள், அனைவருக்கும் மகிழ்ச்சி

பொதுஉடைமை இல்லாத இந்நாட்டில்
சொத்துக்கள்
பொதுஉடைமை இல்லாத இந்நாட்டில்

பொதுவாக கவிமட்டும் இருக்கட்டுமே
நம்கவிமட்டும் பொதுவாக இருக்கட்டுமே...

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன் (30-Aug-13, 9:59 pm)
பார்வை : 155

மேலே