பெண்

கனவகளோடு வெளிச்த்தை சந்திக்க
வீரிட்டு வந்தேன் இப்பூவுலகில் - பெண்ணாய்
ஆரவனைப்பையும் அன்பையும் எதிர்நோக்கி
அழுகையுடன் தொடங்கியது என் பயணம்
பெண்ணாக - முதல் இழப்பு என் அடையாளம்
அடுத்த வீட்டிற்கு போகிறவள்
என்ற எதிர்கால மேகத்தின்
நிழலில் அடையாளத்தை மறைத்து(மறுக்கப்பட்டு )
நகர்ந்தன நாட்கள்...

கல்வி - அறிவு சுடரின் எண்ணெய்,
ஆனால் வரதட்சணையில் சேர்த்துக்கொள்ள
கல்வி ஓர் தொலைநோக்கு முதலீடு!!
எனக்காக உருவாக்கப்பட்ட சூழல்கள்
யாவும் எவனோ ஒருவனுக்காக
என்னை தயார்படுத்தவே.....

இலக்கை வைத்துவிட்டு
கடிவாளத்துடன் அவர்கள் வரைந்த
பாதச் சுவடுகள் - என்முன்!
இலக்கை அடையும் பாதை
தவிர சுற்றியும் இருளாகவே
இருந்தன பயணப்பட்ட உலகம்

அம்மாவிடம் கற்ற சமயல்,
அப்பாவின் அறிவுரைகள்,
பாட்டியின் அனுபவங்கள்,கல்வி
இவையனைத்தும் வேறு ஒருவனுக்காகவே
எனில் நான்??...எனக்காக ???
"எனக்கான நான்" என்ற நிகழ்காலத்தை
புதைத்து எதிர்காலமா??

கண் விழித்து பார்த்த
முதல் நொடி தொடங்கி
தலைகுனிந்து தாலிஏற்கும் நொடிவரை
ஏற்றுமதிக்காக காத்திருக்கும்
உயிருள்ள சரக்கு பொருளா பெண்!!!!

கருவில் சுமந்தவளை என்
நிழலில் சுமக்க,
தோளில் சுமந்தவரை என்
உழைப்பில் இளப்பாற காலத்தைக்
கடனாக கேட்கிறோம்!

பட்டாம்பூச்சி கனவுகள்!
நிலாச்சோறு ஆசைகள்!
வானவில்லின் வண்ணங்களாய்
எதிர்காலத்தை வரைய
தூரிகையை எங்கள் கைகளில் கொடுங்கள்!!
எங்கள் கனவுகளை வழிநடத்துங்கள்
உங்கள் கனவுகலுக்காக அல்ல....

மறுக்கப்பட்டால்
மீண்டும் பெண்ணாகாவே ஜீவிப்பேன்
என் நாட்களை எனக்காக வாழ!!!!!!!

---வினோ

எழுதியவர் : வினோ (31-Aug-13, 4:15 am)
பார்வை : 97

மேலே