ஆசை என்னும் பூனைக்கு..
ஆக்கமும் ..தேக்கமும்..ஆசையில் .
.ஊக்கமும் உதறலும் ஆசையில்..
ஏக்கமும் ..எரிச்சலும் ஆசையில்
எடுப்பதும் . தொலைப்பதும் ஆசையில்..
ஆசை என்ற ஓன்று..
அவனியில் இல்லை என்றால்..
பூஜையும் இல்லை..புரிதலும் ..இல்லை..
இருப்பேன் என்பதும் ஆசை.....
இறப்பேன் என்பதும் ஆசை ....
துறப்பேன் என்பதும் ஆசை....
தொடர்வேன் என்பதும் ஆசை....
மறப்பேன் என்பதும் ஆசை....
மலர்வேன் என்பதும் ஆசை...
வளர்ப்பேன் என்பதும் ஆசை...
மழிப்பேன் என்பது ஆசை.....
ஆசை ஒன்றே அச்சாணி
அடித்தால் ஒலிக்கும் கோவில்மணி !.
ஆசை இல்லா உலகம்,
ஆர்வம் தொலைத்தே சுழலும் !
பார்வை தொலைத்த கண்ணும்..
பாதை தொலைத்த மண்ணும்
ஆசை தொலைத்த பூமி
அங்கே ஏது சாமி?
ஆசை என்பது வரம்தான்
அளவோடு இருந்தால் நலம்தான்..
உணர்ந்து கொண்டால் சுகம்தான்
உன்னை உயர்த்தும் பலம்தான்.
உரசிக்காட்டும் தரம்தான்
..
ஆசை என்னும் பூனைக்கு
அளவாய் நீயும் பாலுற்று
வாழும் கலை ரசிக்கும்
வாழ்க்கை பாதை இனிக்கும் !.