பிள்ளையின் தவிப்பு.....
இவ் புதுக் கவி தமிழ் சொல் வளங்கள், வசன முறைமை என்பன தவறாக தோன்றும் போது அதனையிட்டு முதலில் மான்னிப்பு கோருகிறேன். சிறு குழந்தை தமிழ் எப்படி பேசும்..? தமிழ் படித்து பேசுமோ? இல்லை என நினைத்தால் ஒரு சிறு பிள்ளை பேசுவதாக நினைத்து அதனை படியுங்கள்.. எல்லாம் புரியும்
அந்த ஐந்து வயசு
செல்லம் பேசுகிறது
பள்ளிகூடம் போக மாட்டன்..
அம்மா.....
என்ன பாரும்மா...
நான் யாரு?
ஏம்மா நீதான் என்ட அம்மாவா...?
உங்க சீனுக் குட்டி மாதிரி
நானும் உன் பிள்ளையில்லையா அம்மா?
அவக்கு மட்டும் தான்
பால் குடுப்பிங்களா
எனக்கும் குடிக்க
ஆசையா இருக்கும்மா..
அம்மா அப்பாவ ஏன்
மாமான்னு கூப்பிட சொல்ற
ஒருக்கா அப்பான்னு
கூப்பிடட்டா அம்மா
சீனுக் குட்டி அப்பாட பிள்ளை என்றா நான்
உன் பிள்ளை இல்லையாம்மா...
ஏனம்மா சிரிக்கிறா?
சொல்லணையம்மா....
உங்க வவுத்தில என் சீனுக்குட்டி
இருக்கும் போது
நான் தனேயம்மா
உங்க பக்கத்தில படுத்தன்
இப்ப ஏனம்மா என்ன
தனிய படுக்க சொல்லிறிங்க
அம்மா சீனுவ அப்பா
கொஞ்சுராரும்மா என்ன
கொஞ்ச மாட்டாரா அம்மா
நான் கருப்புன்னு தானே
என்ன கொஞ்சுராரில்ல
அம்மா என் சீனு அப்பாவையும்
உங்களையும் மாதிரி
வெள்ளைய இருக்கும்மா
நான் மட்டும் ஏன்
கறுப்பா இருக்கன்
அம்மா நான் உன்
பிள்ளைன்னு சொல்ற
அப்பா அண்டைக்கு
உன்ன அடிச்சு போட்டு
உண்ட பிள்ளைய
கூட்டிட்டு போ
நான் என்ர பிள்ளையோட
இருக்கிறன் எண்டு சொல்லறார்
அப்ப நான் அவர்ட பிள்ள இல்லாயாம்மா ...?