உடைபடா உலகம்

என்றுமே எண்ணியதில்லை
இறுக்கி இருக்கும் கயிற்றினை
வர்ணம் பூசி நாகரிக மனிதர்களாய்
மீண்டும் வெளுத்த அம்மணத்திற்காய்
நிதானமிழந்து சிதறி விடக் கூடாதென்று
சுமந்தலைந்த காயங்களுடன்
வாழ்வின் வறட்சியாக
நிராதரவான உணர்வும்
மரங்களின் மௌனமும்
இரண்டும் அங்கேதானிருந்தது
ஒன்றின் மேல் ஒன்றாக
காற்று வரைந்து விட்டு போன
ஓவியமான நெளி அலைகள்
நிரம்பிய நிழல் நிதானமிழந்து
கசந்து வெளியேறும்
அர்த்தங்களின் விரிவாக்கம்
சற்றே அச்சுறுத்தும்.
கதவுகளை மூடிவிட்டு முனகும்
தவறிய அழைப்புகள்
கட்டப்பட்ட கடிவாளங்கள்
உடைபடாத ஒருஅந்தி பொழுது
தூக்கி வீசப்பட்ட முகக்கண்ணாடி
சாயும் இளமஞ்சள் நீர்க்குமிழில் உடைந்தபடி

எழுதியவர் : த.நந்தகோபால் (31-Aug-13, 9:35 pm)
சேர்த்தது : nandagopal d
பார்வை : 69

மேலே