[486] கருத்தினுள் பூத்த கவிதைகள்..(7)

135905 தமிழின் தோழி கவிதைக்குக் கருத்தாக..

முலையிழந்த பெண்கள்!
குலையிழந்த வாழைகள்!
தலையிழந்த உறவுகள்!
தவிப்பிழந்த மனங்கள்!
நிலையிழந்த நாடு!
நெருப்பிழந்த வீடு!
விலையிழந்த மனிதம்!
வீறிழந்த புனிதம்!
கலையிழந்த பண்பு!
கருத்திழந்த கடவுள்!
கொலைவிழுந்த போர்கள்
கொண்டுவரும் சீர்கள்!
====== =====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (31-Aug-13, 10:03 pm)
பார்வை : 97

மேலே