ஒதுக்கு
மனது திறக்காத மங்கையை எண்ணி
எனது மனைவி எனவே - தினமும்
கனவவில் மிதக்கும் கருமம் அதனை
உனதின்றி யாக்கி உணர்.
நிலவு வடிவான நேரிழையாள் நெஞ்சுள்
உலவுகின்றக் காற்றாய்த் தழுவ - அலவு
புலவு கொதிக்கும் வகைபுரியும் அன்பால்
செலவு ஏற்படுத்தும் காண்!
புனிதம் மலராய் புகழ்பாடிக் கொள்ளும்
மனிதம் எழில்மாதர் விட்டுத் - தனிமை
இனிமை தனைநாளும் கற்றுத் தெளிய
முனிவம் அடையும் முனைந்து.
இளமை அழைக்கும் பருவ வழியில்
உளமை மறந்தே நடந்து - தளப்பு
அளவை கடக்கும் நிலையிலே நிற்கும்
குளகன் எனும்பேர் ஒதுக்கு.