தமிழரின் தாகம்

எங்கள் கண்களில் சோற்வில்லை
கால்கள் ஓயவில்லை
சுவாசம் நிற்கவில்லை
ஈழ மண்ணில் சிதறிய குருதியின் ஈரம் காயவில்லை
தாயக தாகம் தனியவில்லை
தனிநாடு தனாட்சி உரிமையின் தாகமும் தீரவில்லை

உடலை இழந்தோம்
தாயக உரிமையை இழக்கவில்லை
உடலுறுப்புகளை இழந்தோம்
நம்பிக்கையை இழக்கவில்லை
ஆயுதங்களை இழந்தோம்
வீரத்தை இழக்கவில்லை

பொன் விலைந்த ஈழத்தை பாலையாக்கினாய்
பாலையில் நாவறண்டு தாகமெடுப்பது போல்
தமிழீழ புலிகளில்லா ஈழத்து பாலையைக் காணும் போது
தமிழீழ தாயக தாகமெடுக்குதடா

எம் மண்ணில் உடல்கள் சிதறின
எம் மக்களின் ஒற்றுமை சிதறவில்லை

பிறரின் கரம் வேண்டாதவர் எம் தலைவர் பிரபாகரன்
அவரின் கரம் தழுவி வளர்ந்த நாங்கள்
உலக நாடுகளின் கரமின்றி எங்கள் கரத்தைக் கொண்டு
எம் தலைவர் அடித்தளமிட்ட
தமிழீழ தாயகத்தை அடைவோம் நாம்

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (1-Sep-13, 9:58 am)
பார்வை : 226

மேலே