+கவி வாழ்க! கவி வாழ்க! கவி வாழ்க!+

அன்பை ஊட்டும் கவி வாழ்க!
ஆசை போக்கும் கவி வாழ்க!
இன்பம் கூட்டும் கவி வாழ்க!
ஈகை தூண்டும் கவி வாழ்க!
பண்பை புகட்டும் கவி வாழ்க!
பாசம் பேசும் கவி வாழ்க!
நன்றி பாடும் கவி வாழ்க!
நட்பை புகழும் கவி வாழ்க!

உன்னை உணர்த்தும் கவி வாழ்க!
ஊக்கப் படுத்தும் கவி வாழ்க!
மண்ணை வணங்கும் கவி வாழ்க!
பெண்ணை மதிக்கும் கவி வாழ்க!
கண்ணீர் துடைக்கும் கவி வாழ்க!
கருத்தாய் ஒளிரும் கவி வாழ்க!
துன்பம் துரத்தும் கவி வாழ்க!
துணிவை பழ‌க்கும் கவி வாழ்க!

இதமாய் இனிக்கும் கவி வாழ்க!
மெதுவாய் வருடும் கவி வாழ்க!
பூவாய் மணக்கும் கவி வாழ்க!
பனியாய் பொழியும் கவி வாழ்க!
தேனாய் சுவைக்கும் கவி வாழ்க!
தெளிவாய் உரைக்கும் கவி வாழ்க!
தானம் போற்றும் கவி வாழ்க!
மானம் காக்கும் கவி வாழ்க!

இழிவை இகழும் கவி வாழ்க!
அறிவைப் பெருக்கும் கவி வாழ்க!
தியாகம் போற்றும் கவி வாழ்க!
தாகம் தீர்க்கும் கவி வாழ்க!
தப்பை திருத்தும் கவி வாழ்க!
துக்கம் விலக்கும் கவி வாழ்க!
பந்தம் கொடுக்கும் கவி வாழ்க!
சொந்தம் உணர்த்தும் கவி வாழ்க!

சாதி விரட்டும் கவி வாழ்க!
நீதி கொடுக்கும் கவி வாழ்க!
தேசம் பாடும் கவி வாழ்க!
வேஷம் கலைக்கும் கவி வாழ்க!
பொறுப்பை உணர்த்தும் கவி வாழ்க!
வெறுப்பை விலக்கும் கவி வாழ்க!
சான்றோர் புகழும் கவி வாழ்க!
ஆன்றோர் மகிழும் கவி வாழ்க!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Aug-13, 6:34 pm)
பார்வை : 99

மேலே