பெண் மனம்
சுற்றி சுற்றி வருகின்றான்
அம்மாவை
சுற்றும் முற்றும் பார்த்தாலும்
அம்மாதான்
பற்றானாலும் பாசமானாலும்
அம்மாதான்
எற்றைக்குத் திருந்துவானோ
என் கணவன்
ஐயைந்து வருடம் சென்ற பின்
சொன்னாள்
ஏறெடுத்தும் பார்க்காத
என் பிள்ளை
ஏன் பெற்றேனோ என் வயிற்றில்
இவன் தன்னை
தாய் என்றும் தந்தை என்றும்
இல்லை பாசம்
புறந்தள்ளிச் சென்றானே
வேறு தேசம்
மனைவி மீதும் மக்கள் மீதும்
உள்ள நேசம்
காணவில்லை என்னிடத்தில்
என்ன தோஷம்
ஐஇரண்டு திங்களாய்
ஆவலுடன் காத்திருந்து
கைஇரண்டில் பெற்று
மமதையுடன் மடி ஏந்திய
என் அருமை மகனை
என் சொல்ல