முத்துச் சங்கிலி
அன்னையே!
என் துயரத்தில் உதிர்த்த
கண்ணீர்த் துளிகளால்
முத்துச் சங்கிலி ஒன்று நான் புனைந்து
உன் கழுத்தில் அணிவிக்கிறேன்!
தாரகைகள் தங்கள் ஒளி வெள்ளத்தைக்
கொலுசாக்கி உன் பாதங்களை அலங்கரிக்க,
நான் அணிவித்த முத்துச் சங்கிலி
உன் மார்பில் தொங்கி அணி
செய்கிறது!
பொருளும் புகழும் நீ அளித்தாய்,
கொடுப்பதும் கொடாததும் உன் விருப்பமே,
நான் கொண்ட துயரம் முழுதும் என்னால்தானே!
என் துயரத்தை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்,
உன் கருணையுடன் அருளையும் எனக்குப் பரிசளி!
ஆதாரம்: ரபீந்த்ரநாத் தாகூரின் Chain of pearls என்ற கவிதை.