அமுதத் தமிழே ....!!!

உயிராய் மெய்யாய்
உயிரின் மெய்யாய்
என்னுள் கலந்தாய் !
பிழை நீக்கும்
ஆயுதமாய்
உள்ளம் புகுந்தாய் ...!!
மூச்சின் ஓட்டம் நீயானாய்
உண்டிச் சுவையும் நீயானாய்
இதய வாசம் நீயானாய்
நயன நோக்கும் நீயானாய்
பேசும் மொழி நீயானாய்
செவியின் ஒலியும்நீயானாய் ...!!
உணர்வுகளாய் நிறைந்து விட்டாய்
உதிரத்திலும் கலந்து விட்டாய்
முத்தமிழாய் பதிந்து விட்டாய்
முத்திரைநீ பதித்து விட்டாய் ...!!
அகரம் உனது முதலாகும்
ழகரம் உனது சிறப்பாகும்
சிகரம் உனது இடமாகும்
கடவுள் தந்த வரமாகும் ....!!
பேச்சுத் தமிழில்
பல வகையுண்டு !
கேட்கக் கேட்க
பல சுவையுண்டு !
மதுரைத் தமிழில் மண்மணக்கும்
கொங்குத் தமிழோ மனம்மயக்கும் !
நெல்லைத் தமிழில் தேன்பாயும்
தஞ்சைத் தமிழோ சொக்கவைக்கும் !
குமரித் தமிழில் இளமை கொஞ்சும்
இலங்கைத் தமிழோ யாழ் மீட்டும் !
பேச கேட்க திகட்டாதது
தரணியை ஆளும்
செம்மொழியே - தங்கத்
தமிழ் மொழியே ....!!
எத்தேசம் சென்றாலும்
என் நேசம் நீ தானே ...!!
எந்நாளும் படித்தாலும்
என் வேதம் தமிழ் தானே .....!!!