தமிழ்ச்சொல் வளம்!

இதழ் வகை:

அல்லி - அகவிதழ்
புல்லி - புறவிதழ்
இதழ் - சிறியது
மடல் - பெரியது
''''''''''''''''''''''''''''''''''''''''''''''
பிஞ்சு வகை:

பூம்பிஞ்சு - பூவோடு கூடிய இளம்பிஞ்சு
பிஞ்சு - இளங்காய்
வடு - மாம்பிஞ்சு
மூசு - பலாப்பிஞ்சு
கவ்வை - எள்பிஞ்சு
குரும்பை - தென்னை, பனை முதலியவற்றின் இளம்பிஞ்சு
முட்டுக்குரும்பை - சிறு குரும்பை
இளநீர் - முற்றாத தேங்காய்
நுழாய் - இளம்பாக்கு
கருக்கல் - இளம்நெல்
கச்சல் - வாழைப்பிஞ்சு
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
(பல்வேறுநிலை) காய் வகை:

பழக்காய் - பழுத்தற்கேற்ற முற்றிய காய்
கடுக்காய் - முற்றிய பனங்காய்
காலக்காய் அல்லது பருவக்காய் - உரியகாலத்திற் காய்ப்பது
வம்பக்காய் - காலமல்லாக் காலத்திற் காய்ப்பது
கருக்காய் - முற்றிய காய்
'''''''''''''''''''''''''''''''''''''
முதிர்ச்சி வகைகள்:

பழுத்தல் - மா, வாழை முதலியவற்றின் காய்முதிர்ச்சி

முற்றல் - சுரை, புசணி முதலியவற்றின் காய்முதிர்ச்சி

நெற்று - தேங்காய் பீர்க்கு முதலியவற்றின் காய்முதிர்ச்சி

விளைச்சல் - நெல் சோளம் முதலியவற்றின் கதிர் முதிர்ச்சி.

எழுதியவர் : ` (2-Sep-13, 10:58 pm)
சேர்த்தது : சீனிவாசன்
பார்வை : 296

மேலே