திருக்குறள் சிந்தனைகள்

திருக்குறள் சிந்தனைகள்

கடவுள் வாழ்த்து

திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவராக இருந்தாலும், அவர் கடவுளைப்பற்றி அதிகம் பேசவில்லை. தன்னுடைய நூலில்,"கடவுள் " என்ற சொல்லே இடம்பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார். மேலும் கடவுளின் உருவத்தைப் பற்றியும் பேசாமல், அவரது திருவடிகளைப் பற்றியும் , குணத்தைப் பற்றியும் பேசுகிறார். திருக்குறளுக்கு முன்பாகவே தொல்காப்பியத்தில், " கடவுள் " என்ற சொல் இடம்பெற்றிருப்பது ஈண்டு நோக்கத்தக்கது.

ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான்,அறவாழி அந்தணன், எண்குணத்தான், உலகியற்றியான், வகுத்தான் , தாமரைக் கண்ணான் , பற்றற்றான் என்று பல பெயர்களால் இறைவனை அழைக்கின்றார். பொதுமை அறம் கூறும் நூலாதலின் தான் பிறந்த இனம்,குடி, பேசும் மொழி, சார்ந்த மதம் ,ஊர், நாடு ஆகியவற்றை வெளியிடாமல் நூலை இயற்றியுள்ளார்.

எழுதியவர் : (2-Sep-13, 10:53 pm)
சேர்த்தது : சீனிவாசன்
பார்வை : 66

மேலே