[493] கற்றவர் என்னிங்கு சாதிப்பரோ? ..

விம்மிப் புடைக்குது நரம்பு-உன்
வீரக் கவிதையைப் படித்து;
அம்ம! குடித்திங்கு கிடக்குறார்-இந்த
அநியாயம் கண்டுமே நடக்கிறோம்!
பாயத் துடிக்குது கால்களும்-இந்தப்
பாதகம் செய்பவர் மேலுமே!
கும்மி உதைத்திடப் போகுமோ?- இந்தக்
கூறுகெட் டோர் எழ லாகுமோ?

முகவரி தன்னையே இழந்தவர்-குடி
மூழ்கிடத் தாமுமே விழுந்தவர்!
தகவுகள் அழிந்துமே வாழ்பவர்!-இவர்
தம்மைவைத் தோ எல்லை காத்திட?

அஞ்சித் தினமிவர் சாகிறார்-பலர்
ஆட்சிக்கு வந்துமே போகிறர்!
நெஞ்சை நிமிர்த்திடப் போகுமோ?-இந்த
நிலைகெட்ட பேர்கண்டு நாடுமே!

இந்தக் கொடுமைகள் நிலைக்கவோ?- வரும்
சந்ததிக் கே நன்மை பிறக்குமோ?
பெற்ற சுதந்திரம் ஏதுக்கோ? -இந்தப்
பேதைகள் வைத்ததைக் காக்கவோ?

கற்றவர் என்னிங்கு சாதிப்பரோ?- என்போல்
கவிதைகள் எழுதியே சோதிப்பரோ?
==========

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (4-Sep-13, 7:49 pm)
பார்வை : 58

மேலே