காதலர்களே .........!

காதல் போதையிலே !
கடற்கரை மணலிலே !
படகுகளின் மறைவிலே !
பலான வேலைகல் செய்ய
காதலர்களே ...!
கடற்க்கரையில்
கடலை போடாதிர்கள் !

அன்று........!
காதலிக்காய் கல்லறை கட்டினான் ஒருவன் !
காவியமானார்கள் ரொமியோவும் ஜூலியட்டும் !
அழகு லைலாவும் காதலுக்காய் சமாதி ஆனாள்!
திவ்யாவும் சரவணனும் ஜாதி விசக் காற்றில்
கரைந்தே போனார்கள் ..! இருந்தாலும்
இளைஞர்களே ..! காதல் செய்யுங்கள் ..!

காதலர்களே ....!
ரோஜாவைக் கொடுத்து
முத்தத்தை பரிமாறிக் கொள்ளாதிர்கள் ..!
காதலின் சப்தம் முத்தத்தில் இல்லை ...!
இதயத்தின் ஓசை வெறும் லப் டப் இல்லை !

காதல் புத்தகத்தில் நீங்கள்
கவிதையாக வேண்டுமானால் ....!
காதலர்களே .....
உடல் ஊனமுற்றவர்களுக்கு
ஓடிப் போய் உதவி செய்யுங்கள் ..!
முதியோர் இல்லங்களில் உறவுகளால்
ஒடிந்திட்ட முதியோருடன்
ஆதரவாய் பேசி ஒரு மாலைப்
பொழுதை ஆனந்த மய மாக்குங்கள் ...!

குறையுள்ள மனிதர்களிடம்
குறை இல்லாமல் நிறைவாய் பேசுங்கள் ..!
உங்கள் காதல் உறவுப் பாலத்தை
அங்கு உறுதியாக்கிக் கொள்ளுங்கள் ..!

வீடுகள் யெல்லாம் அடுக்கு மாடியானத்தால்
வீட்டுக்கு ஒரு மரம் இனி வைக்க வேண்டாம் .!
காதலிப்பவர் எல்லாம் இனி ஒரு
காதல் மரம் நட்டு வையுங்கள் ....! - அதில்
தன்னம்பிக்கை தண்ணீரை ஊற்றி
தளரா உள்ளத்தோடு தவமாய் காத்திடுங்கள் ..!
இதனால் ...........!
மாசான சுகாதாரத்தால் கிழிந்த ஓசோன் படலம்
காதலர்களால் தைக்கப் படும் ...! இதனால்
உங்கள் காதலும் பலப் படும் ......!

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (5-Sep-13, 12:06 am)
பார்வை : 69

மேலே