தமிழ் குடி ..!
இந்திய துணைக்கண்டம்
மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டது..
என் தமிழகமோ
முழுவதுமாய் "தண்ணீரால்" சூழபட்டிருக்கிறது..
உலகம் தண்ணீரால் அழியும் என்பது பேச்சு..
தமிழகமே அதற்கு ஏற்ற சாட்சி..
குடியை ஆதரிப்பது முறையா என வினவினேன் இயல்பாய்..
கிடைத்த பதில்,
குடிமகன்கள் வராமல் இல்லை வருவாய்.
குடிப்பது உங்கள் குடிஉரிமை குடிமகன்களே என்று கூவி கூவி மக்களுக்கு ஊற்றிவிட்டு..
தமிழகமும் தமிழக அரசும் தள்ளாடிகொண்டிருக்கின்றன..