அம்மா

அம்மா என்னும் கருவறையில் தூங்கவைத்தவளே
ஆரோக்கியத்தை எனக்காகதந்தவளே
இமை போல் பாதுகாத்து கொண்டிருபவளே
ஈகை மனப்பான்மையை கற்று கொடுத்தவளே
உறக்கமில்லாமல் என்னை உன் கருவறையில் தாங்கி கொண்டிருபவளே
ஊசலாடும் என் வாழ்கையை திருத்தி கொண்டிருபவளே
எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்ந்து கொண்டிருபவளே ஏழ்மையிலும் எனக்கு பொறுமையை கற்று கொடுத்தவளே
ஐம்புலன்களை அடக்க கற்றுக்கொடுத்தவளே
ஒற்றுமையை கற்று கொடுத்தவளே
ஓசையாய் என்னை அழைத்து கொண்டிருபவளே
ஒளஷதம் என்னும் மருந்தான என் அம்மாவை
எனக்கு தந்த இக்கடவுளுக்கு இக்கவிதை சமர்ப்பணம் .