எலி எழுதிய கவிதை !
********************எலி எழுதிய கவிதை************************
( )
_(_ )_சுண்டெலி !
___________________________________________________நண்பர் ஜெயசங்கர் ஜெயராமையா அவர்கள் எழுதிய
"எலி உறவு"
சிறுகதைப் படித்தேன் .பத்து நாட்களுக்குமுன் நான் என்வீட்டில் நடந்த நிகழ்வை
ஒரு புதுக்கவிதையில் கதையாக எழுதினேன் .
எழுத்தில் பதிவு செய்ய நேரம் இல்லாததால்
உடனெயெனால்கொடுக்க முடியவில்லை
அதனால் "எலி உறவு"சிறுகதைக்கும் இந்தக் கவிதைக்கும் உறவு உண்டு என்பதை முன்னரே
நான் அறிவித்து விட்டு என் கவிதையை
படைக்கிறேன்
என் வீட்டில்
ஏழெட்டு நாளாய்
குட்டி எலியின் தொல்லை !
கொய்யாப் பழத்தைக்
கொறித்து க் கொறித்து
ஹைக்கூ எழுதியது
உடைத்தத் தேங்காய்
சமையல் மேடையில்
மறதியாய் விட்டாள் என் மனைவி !
சுண்டெலி வந்து
சுரண்டி சுரண்டி
புதுக்கவிதை எழுதிப்
புரியாமல் சென்றது !
வளமான புள்ளிப்
பச்சை வாழைப்பழம்
செரிமானத்திற்கு
வாங்கி வைத்தேன்
சிறிய எலி சீண்டிப்பார்த்து
குழியைச் செய்து
குறளைப்படைத்தது !
முந்திரி டப்பாவை
மூடாமல் விட்டதால்
தந்திர எலி
முந்திரியை ச் சிதறிடச்
சிதறியது சிந்துக்கண்ணி
சிறப்பாய் எழுதியது !
முந்திரி சிதறியதை
சொந்தப்பிள்ளை
எலிப் பிள்ளைப் போல்
பிராண்டினான் என்னை ?
நிந்தனை செய்த
எந்தன் பிள்ளை யால்
எந்தன் மனம்
நொந்து போனேன் !
நசுக்கான் எலியால்
வசையெல்லாம் நான் ஒருவனே
பெற்றேன் ,பெற்றதால்
விசுக்கென கோபம்
விரைந்து சென்று
எலிப்பொறி ஒன்று
வாங்கி வந்தேன்
"குட்டி எலியே உன்னை
எலிப் பொறி ப் பெட்டிக்குள் அடைப்பேன்!
வட்டியும் முதலும்
சேர்த்து த் தருவேன் ",
என்றே நினைத்து
வகையாய் வதங்கிய
வஞ்சிரக் கருவாடு
பொறியின் கொக்கியில்
சரியாய் மாட்டியே
அடுக்களையின் மூலையில்
ஆவேசமாய் வைத்தேன்
சில்மிச எலியின்
பல் மிகப் பெரிதோ ?
பக்குவமாய் க் கருவாடைச்
செக்குச் செதிலாக
நாலடி வெண்பா வாய்
உதிர்த்தியது
பாதி உதிர்த்து
மீதியை உண்டு
கொழுத்தது !
விதிர்த்துப் போனேன்
விவேகமான
எலியின் முன்னால்-
விவரமின்றி விழித்து
நின்றேன் ?
தப்பி ஓடிய தம்மாத்தூண்டு
எலிக்கு எவ்வளவு மூளை !
சீழ் பிடித்த சிரங்கைச்
சொரிவது போல என்மனம்
பாழ்பட்டுப் பிராண்டியது!
எள் முறுக்கு ,இனிப்புருண்டை ,ரவாலட்டு
சீடை , உருளைக் கிழங்கு வறுவல் (சிப்ஸ்)
ஆப்பிள் ,திராட்சை ,வா .பழம்
காக்க எண்ணி
முன்னெச்சரிக்கையாய்
குளிர் பதனப் பெட்டிக்குள்
துளியும் வருத்தம் இன்றித்
துணிவாக வைத்தேன் !
இனித் தொல்லை இல்லை என
இரவில் அமைதி ,
இயல்பான தூக்கம் !
இனியக் காலைப்
பொழுது விடிந்தது !
வழக்கமாய் வாசல் கதவு
தாழினைத் திறந்தேன் !
ஐயகோ !
காக்கை அலகில்-
எனது அன்புச் சுண்டெலி
அறுசீர்விருத்தமாய்
ஆறுதுண்டாகக்
கிடந்ததே !
பூனைக்கு வாழ்வு
ஒன்பது முறை வாய்க்குமாம்!
வீணைக்கு மூன்று
தலைமுறை தொடருமாம்
பாவம் எலிக்கு
பதினைந்து நாள்தானா ???
மனம் கணத்துப் போனது !
விளையாடியது போதும் என்றே
விண்ணுலகம் சென்றதுவோ ?
இறுதியில் என்னை
இரங்கற்பா இயற்றவைத்தே??!