நானும் ஏலக்காரியும்
அழகு , அடக்கம் மீறி
இருந்தது. என் மனதை
சட்டை செய்யும்
பிரம்மனின் ஒரு கலைச்சிற்பம் தான்.
தன் உடலை காம உணர்வின்
உணவுப்பண்டமாக்கி பிறருக்குப்
பறிமாறுபவள் அவள் .
உன் உணர்வின் பசி தீர்க்க
என்னை உண்பாய்
பண்டம் இந்த விலை என்றாள்.
மன்மதப்பசி எவருக்குமுண்டு
அதை ருசிக்க
இடம் பொருள் காலம்
இலக்கணமுண்டு என்றேன் .
கற்பைக் களவாடுவது கூடல் அல்ல
கற்புடன் களவாடுவதே கூடல் என்றேன் .
ஒரு நிமிடம் உற்றுப்பார்த்தவள்
நீ ,உத்தமனா, இல்லை ;
இளமை வேகத்தில்
வளமை இல்லாதவனா என்றாள் .
மனதினுள் சிரித்துக்கொண்டேன்
பாவம் , இக்கலியுலகில்
அவளுக்கென்ன துன்பமோ தன்
உடலை ஏலம் விடும் அளவிற்கு ....!
--
த.மலைமன்னன்