நிறம் மாறும் எண்ணங்கள் !
******************நிறம் மாறும் எண்ணங்கள் !********************
1977-ல் நடந்த உண்மை நிகழ்வு
______________________________
எனக்கு அப்போது 25 வயது !சைதாப்பேட்டையிலிருந்து ,அண்ணா சாலை டிவிஎஸ் அருகில் இருந்த என்அலுவலகத்திற்கு ப்
பேருந்தில் சென்று கொண்டிருந்தேன் .
நந்தனம் கலைக் கல்லுரி நிறுத்தம் வந்த போது விழியிழந்தவர் ஒருவர் தட்டுத் தடுமாறி ஏறினார் .
நான் அமர்ந்திருந்த இடம் அருகே அவர்
வந்த போது ,நான் எழுந்து
"வாங்க இங்கே உட்காருங்க "எனக் கையை ப்
பிடித்து என் இருக்கைக்கு அழைத்தேன் !
விருட்டென ,என் கையை உதறித் தள்ளி விட்டு
"என்னால் நின்னுக்கிட்டு வர முடியும் !பார்வைதான் இல்லையே தவிர ,எனக்கு இரண்டு
கால்களும் நன்றாகத்தானே இருக்கிறது !.நீங்க
உட்காருங்க !" என்றார்.
நமது எண்ணத்தை நொடிப் பொழுதில் பொடிப்பொடியாக்கி விட்டார் அந்த விழியிழந்தவர்
அவரின் தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகளில்
நிலைத்தடுமாரிவிட்டேன்
அவர் மீது ஏற்பட்ட இரக்க உணர்வால் இடம் கொடுக்க விழைந்தேன்
ஆனால் அவருடைய எண்ணம் வேறுவடிவத்தில்
வெளிப்பட்டது
எண்ணங்களின் நிறம் மாறிக்கொண்டேதான்
இருக்கிறது அல்லவா?