வாழ்வில் வெள்ளை நிறம்

வாழ்வில் கண்டிடும் பல பொருட்கள்
வாழ்ந்திட நமக்கு உதவிடும் பலவிதம் !

நல்லவைக்கு உதவிடும் பலவும்
அல்லவைக்கு அடையாளம் சிலவும் !

அமைதியின் சின்னமோ வெண்புறா
சமாதன சின்னமும் வெள்ளைக்கொடி !

சூரியனின் வெப்பத்தில் உழைப்பவர்க்கும்
குளிர்ந்திடும் மனதும் வெண்ணிலவால் !

மங்கல முகமுடன் இருந்திட்ட மங்கையை
கைம்பெண்ணாய் காட்டும் வெள்ளை சேலை !

அரசியல் வாழ்வின் ஆரம்பமே வெள்ளை
ஆட்சிக்கு வந்ததும் ஆரம்பம் கொள்ளை !

வயதை காட்டிடும் தலையிலும் வெள்ளை
வயதானால் மாறிடும் மனதும் வெள்ளையாய் !

அகிலத்தை ஆட்டுவிக்கும் மாளிகை வெள்ளை
ஆனாலும் ஆள்பவரோ வெள்ளையர் இல்லை !

வெள்ளை உள்ளமுடன் வாழ்ந்தால் இன்றோ
வெற்றி பெறுவதே வாழ்வில் கானல் நீராகுது !

வெள்ளை நிறத்தின் பன்முகத் தோற்றங்கள்
வாழ்வில் காணும் வண்ணமிகு மாற்றங்கள் !

​​ பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (6-Sep-13, 10:10 pm)
பார்வை : 1347

மேலே