வேண்டும் ... வேண்டும் .....!!

மதபேதம் மடிந்து
மடமைகள் களைந்து
மனிதம் பூத்து
புனிதம் பெறவேண்டும் ....!!

சாதிசண்டை ஒழிந்து
சமரசம் நிலவி
சன்மார்க்க நெறி
தழைத்தோங்க வேண்டும் ....!!

வெறித்தனம் கொண்டு
வெடிகுண்டு வீசும்
தீவிர வாதிகள்
தீக்கிரையாக வேண்டும் ....!!

பெண்மையைக் குலைக்கும்
கேடு விளைவிக்கும்
கயவரைக் கண்டால்
குழிபுதைக்க வேண்டும் ...!!

கறைபடிந்த கரம்நீட்டி
கையூட்டு வாங்குவோர்
பதவி பறித்திட்டு
நாடுகடத்த வேண்டும் ....!!

பாருக்குள் நல்நாடாம்
பாரதத்தில் இனிமேல்
பாலியல் கொடுமைகள்
நடவாமை வேண்டும் ....!!

ஈழத்து தமிழர்
அவதிகள் தொலைந்து
அகதியாய் அலையும்
அவலம் மாறவேண்டும் ....!!

பேராசை எனும்பேய்
தலை விரித்தாட
கொடூர பாதகம்
புரியாமை வேண்டும் ....!!

யுத்தச் சத்தம்
கேட்கா உலகும்
அமைதி பூங்காவாய்
பொலிவுற வேண்டும் ....!!

செம்மொழியான நம்
செந்தமிழ் மொழியே
அழகாய் அமைதியாய்
அகிலம் ஆளவேண்டும் ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Sep-13, 10:40 pm)
பார்வை : 178

மேலே