பெண்ணாய் பிறந்ததில்

வெறி கொண்ட மிருகங்களின்
வேட்டைக்கு பலியானாய்
ஓடும் பேருந்தில் நீ
உயிரோடு பிணமானாய்

குதறி குருதி குடித்த
குணம் கெட்ட மிருகத்தை
குட்டி என்ற காரணத்தால்
கொலைகளம் அனுப்பாமல்
கூட்டிலடைத்து புல் கொடுத்தால்
பசுங்கன்று ஆகுமென்ற
பாரதத்தின் நீதி கேட்டு

பெண்ணாய் பிறந்ததில்
பெருங்கசப்பு கொண்டேன் நான்

எழுதியவர் : thilakavathy (7-Sep-13, 12:24 am)
பார்வை : 154

மேலே