அது என்னாவி போன நாளல்லவோ
எனக்குத் தெரியாமல்
என்கவிதை படிக்கிறாய்
ஏனோ என்னைத் தெரியாதது
போல் நடிக்கிறாய்
மொட்டு வெடிக்குமுன்னே
மலருக்கு ஏங்குகிறாய்
கட்டுகரும்பை காட்டிக்காட்டி
சுவைக்க சொல்கிறாய்
வானவில்லிடம் கடன் வாங்கி
வண்ணம் சேர்த்தாயோ
வண்ணத்துப் பூச்சியைத் தோழனாக
வரிந்து கொண்டாயோ
மலரேமலரே மதிமுகம்
மறந்து போகாதே
தளிரேதளிரே தணலள்ளி
என்மேல் வீசாதே
அனிச்சை பூவிலும்
மெல்லியது என்னிதயமே
அதில் பேரிடிகள் எப்படிதான்
வந்து தாங்குமே
நெஞ்சத்தின் ஆழத்தில் நீந்திப்பார்
நீயும் உணர்வாய் என்சோகம்
நேற்றுவரை துடித்த இதயம்
துடிக்காமல் போனது யார் செய்த பாவம்
கனவறை மெல்லதிறந்து
கவிதைபன்னீர்ஊற்று
காயப்பட்ட நெஞ்சத்தில் கருவிழிகொண்டுகாயம் ஆற்று
பால்நிலவும் தேய்கிறது
பனிநிலவும் தேய்கிறது
பாசம் மட்டும் தேயவில்லையே
பருவமும் ஓய்கிறது
உருவமும் தேய்கிறது
பசலை மட்டும் ஓயவில்லையே
நொடிப்பொழுதும் மறவாத
ஜீவன் நானல்லவோ
அந்த ஒரு பொழுதும் வந்தால்
அது என்னாவி போன நாளல்லவோ
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)