..........நாட்கள்.........
கிராமத்தில் தங்கிய நாட்கள்,
அலுத்து நகர்ந்து நகரத்தின்,
நெருக்கடிக்குள் புகுந்து விட்டேன் !
இங்கே இயந்திர இரைச்சல்களினூடே,
நித்தமும் கலந்து கேட்கிறது,
அங்கே கேட்ட,
அமைதியை குலைக்காத,
ஆட்டுக்குட்டியின் கழுத்தில்கட்டிய,
மெல்லிய மணியின் அழகு ஓசை !!