கடைசிவரை.....

கடைசிவரை
கண்ணில்
தூசு விழுந்ததாய்
கண்ணீர் துடைத்து
தப்பித்தாய்!!!

நெஞ்சில் பதிந்த
நினைவை துடைக்க
எதை சொல்லி
தப்பிப்பாய்??

உன்,
பார்வை வாசல்புறமே
குதிரையில் வந்து
கொண்டு செல்வான்
என்றுதானே

உன் ,
மனம் குதிரையின்
வேகத்தில் இருந்திருக்கும்,
மண் குதிரைக்கூட இல்லா
நான்,
மனம் உடைத்து போட்ட
உறவுகள்
செத்திடுவோம்
எல்லோரும் என்ற
பய
விலங்கை பூட்டீயதரியுமோ?
உனக்கு?

கடைசிவரை
இனி பார்க்க கூடாதென்ற
முடிவில்
நீயோ, நானோ,
யோக்கியவான்களாய்
இல்லை,???

கடைசிவரை
நமக்கு யாரும்
எதிராய் இல்லை
ஏனோ?
நாம்
சேரவில்லை,

கடைசிவரை
நம்மை சேராதிருக்க
கங்கணம் கட்டியவர்கள்
இங்(க்)கனம் இல்லை ??


கடைசிவரை
பிரியக்கூடாதென்றிருந்தோம்
கடைசியில்
பிரிய
நின்றிருந்தோம்,

யார் முதல்
யார் கடைசி
கடைசிவரை
இருந்தால்
பார்ப்போம்!!!!!!

எழுதியவர் : சபீரம் sabeera (8-Sep-13, 3:03 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 52

மேலே