எனக்கிது புதிர்!
"வாழ்க்கை ஏதும் எழுதி வைக்கப்பட்ட கதை இல்லை பாத்திரம் ஏற்று நடித்து நகர, அது நாம் செதுக்கும் சிற்பம் சிலையாவதும் பிழையாவதும் எம்மையே சாருமே. மூச்சு எடுக்கும் கல்லாக வாழ்ந்து அழிந்து மண்ணாகும் மனிதனை விட தன்னை தானே செதுக்கி கலையாக்கி காலத்தை வென்றவன் கல்லறையில் துயின்றாலும் பலர் நெஞ்சறையில் வாழ்கிறான்" இவ்வாறான இப்பிறப்பின் யாதார்தம் என்ன? மண்ணில் உயிராய் உலாவ விட்டான் ஒருவன், கருவறையில் விட்டு எழுந்த உறக்கத்தை கல்லறையில் கண்டு கொள்வதற்கு இடைபட்ட இடைவெளியில் எதை செய்ய வந்தோம்? முன் கூறியதை போல் நம் அடையாளத்தை பிறர் நெஞ்சில் தவழ விட்டு பின் உடல் ஆடையை கல்லறையில் துயில விட்டு, உயிர் போகும் இடம் அறியா பொறிமுறையா!