புரிய வேண்டுமே இதுவும்..?
நேற்றைய நிலா போல
இன்றைய வெளிச்சம் இல்லை
இன்றைய வெப்பம்
நாளைய சூரியன் தராது
இன்றைய வெப்ப நிழல் பளீர்
நேற்று குளிர்
மழை வெள்ளம் ஒதுக்கிய
கூழாங்கற்கள் ஒவ்வொன்றும்
ஒரே மாதிரியாய் இல்லை..
இன்றைய பகைமை
நேற்றைய சினேகிதம்
இன்றைய சினேகிதம்
நாளைக்கு....??
இதுதான் புரியவில்லை
ஆறறிவு பெற்றும்
இந்த மனிதன்
எங்கும்,எப்போதும், எவரிடமும்
ஒரே மாதிரியாய் இருப்பதில்லை
ஏன்..?
புரிந்து விட்டால்
முடியுமோ உலகு..?/