இல்லாமற் ...போ...போ...(வீரன் தாமரை )

படித்தும்
படித்துக் கிழித்ததும் போதும் போ போ...
சரியைக் கற்கத் தானே படித்தாய்
பிறகென்ன
தவறை மட்டும் தத்தெடுததுள்ளாய்..?
படித்துக் கிழித்ததும் போதும் போ போ...

காதலித்தும்
காதலித்து பேதலித்ததும் போதும் போ...போ...
மனம் சேர தானே காதலித்தாய
பிறகென்ன சாதி அறிந்து மறுதலித்தாய்...?
காதலித்து பேதலித்ததும் போதும் போ...போ...

பொருளீட்டியும்
பொருளீட்டி பெருந்தனம் பெற்றது போதும் போ..
வாழ்வு வாழத்தானே பொருளீட்டினாய்...
பிறகென்ன பிறர் பொருளும் கைக்கொள்கிறாய்..?
பொருளீட்டி பெருந்தனம் பெற்றது போதும் போ.

இறந்திடவும்
இறந்து மண்ணில் மறைந்திடவும் தானே பிறந்தாய்
மண்ணில் இறந்தும் போனாய்...
பிறகென்ன பளிங்குக் கல்லறையும் சாதி நிறமும்?
பிறக்காதே மனிதனாய் மீண்டுமொருமுறை...

வாழ்வை கவிதைக்கு...
மனிதத்தை எழுத்தாக்க முடிந்தால்...
இயலவில்லையெனில் இல்லாமற் போ..போ....

எழுதியவர் : வீரன் தாமரை (9-Sep-13, 9:38 am)
பார்வை : 67

மேலே