அண்ணனின் பாசம்
தாய் எக்கணம் என்னை
இந்த மன்னில் ஈன்றாலோ
அக்கணம் முதல் என்னை
இதயத்தில் சுமக்கின்ற
இன்னொரு தாய் என் அண்ணன்....
நீ என்னிடம்
அண்ணனாக பழகியதை விட
அன்னையாகவே பழகுவாய்...
சொல்லாத என்
சொல்லுக்கும் உணர்வுக்கும்
அர்த்தம் உணர்வாய்..
தோல் கொடுப்பாய்..
சோகம் தீர்ப்பாய் சிரிக்க வைப்பாய்..
உன் அன்பிற்கு கைமாறாய்
என் கருவில் உன்னை சுமக்கும்
பாக்கியம் அருள்வாய் இறைவா..
என வேண்டும் முன்
என் சுயநலம்
முந்திக்கொண்டு வேண்டுகிறது
உனக்கு மகளாய் பிறக்கவேண்டும் என்று!