ஆணின் அருமை!!
![](https://eluthu.com/images/loading.gif)
ஆண்--அறிவின் அம்சம்.
ஆண்--ஆளுமை விளக்கம்.
ஆண்--இயல்பே வீரம்.
ஆண்--ஈவின் ஈரம்.
ஆண்--உறுதியின் தீரம்.
ஆண்--ஊழின் ஊழ்.
ஆண்--எரி தீ உழைப்பு.
ஆண்--ஏர் முனைக் காப்பு.
ஆண்--ஒருங்கு சேர் பிணைப்பு.
ஆண்--ஓய்விலா இயக்கம்.
ஆண்--ஔவியம் போற்றான்.
ஃதே ஆணின் அருமை.
கொ.பெ.பி.அய்யா.