[502] கருத்தினுள் பூத்த கவிதைகள்..(15)
திரு. வேளாங்கண்ணி அவர்களின் முகப்பு வரிகளுக்கு..
வடக்கே இருந்தாலும் வாய்ப்பை நழுவ
விடுக்காது செய்ய விழை!
ஊன்றிப் படிப்பாய்; உணர்ந்துள் வாங்குவாய்;பின்
தோன்றின் எழுதத் தொடங்கு!
தோன்றிய தால்,எழுதத் தோன்றுமேல் உன்னெழுத்துத்
தோன்றலில் தோன்றாமை நன்று!
தோன்றிய தெல்லாம் தொடர்ந்தெழுதப் போமானால்
தோன்றா துனக்குப் புகழ்!
பயனுனக்கு மட்டுமோ ? பார்ப்போர் படிப்போர்
பயனறிந்து பாடப் பழகு!
தட்டிப் பழகும் தளமோ எழுத்துன்கை
தட்டி எழுப்பும் தவில்!
***