சிறிய கதைக்குள் பெரிய தத்துவம்
சிறிய கதைக்குள் பெரிய தத்துவம்
வீட்டில் வளர்ந்த கோழிக்குஞ்சை விளையாட்டாய் அந்தச் சிறுவன் கொன்றான். அதை பார்த்துவிட்ட அக்கா, அம்மாவிடம் சொல்வதாய் மிரட்டியே அவனை எல்லா வேலையும் வாங்கினாள். ஒருநாள், மனம் பொறுக்காமல், அம்மாவிடம் சொல்லி அழுதான் சிறுவன். அம்மா, அவனை மன்னித்தாள்.
கோழிக்குஞ்சு கொலை - நாம் செய்யும் தவறுகள்.
மிரட்டும் அக்கா - நம் குற்றவுணர்வு.
மன்னிக்கும் அம்மா – கடவுள்.
கடவுள் நம்மை ஒருமுறை மன்னிப்பதே மறுமுறை தவறு செய்யாமல் இருப்பதற்குத்தான்..!