R.Nirosh - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  R.Nirosh
இடம்
பிறந்த தேதி :  23-Apr-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2012
பார்த்தவர்கள்:  140
புள்ளி:  21

என்னைப் பற்றி...

ரசிகன்....மீடியா தொழிலாளி

என் படைப்புகள்
R.Nirosh செய்திகள்
R.Nirosh - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-May-2014 10:37 am

தமிழினை தலையில் வைத்தேன் - நற்
தரத்தினை சகத்தினில் கேட்டேன் !
உமிழ்வதே தொழிலென கொண்ட - சில
ஊர்வன நெளிவதும் கண்டேன் !

உடலினை விற்றுப் பிழைக்க - இந்த
ஊர்விட்டு ஓடிய பூச்சிகள்
விடமென வார்த்தைகள் வீசி - என்
விடியலை அழிக்குமாம்! சிரிப்பு !

கொள்ளியில் பொசுக்கி என்னை - நீ
கொல்வது தானோ வீரம் ?
எள்ளியே சிரிக்குதென் நெஞ்சு - ஏன்
என்தமிழ் வாட்டுதோ உன்னை ?

கோரத்தை உனக்குள் வைத்தே - என்
தாரத்தை தூற்றிய நாயே !
வீரத்தை என்னிடம் காட்டு - உனை
வேரோடு அழிப்பேன் நானே !

நேருக்கு நேரெனை நோக்க - உன்
நெஞ்சினில் தைரியம் உண்டா ?
போருக்கு வந்துநில் என்றால்- நீ
போர்வைக்குள் மறைவது

மேலும்

மறத்தமிழன் நீ மிரட்டியவன் மரமண்டையோ ? வார்த்தை வாளில் வீரத்தை பார்த்து செத்திருக்க வேண்டும் .கொதிக்கும் தணலை தலையில் கொட்டிக்கொள்ள எவனும் விளைவானோ? விளைந்தால் அவனும் அழிவானே ! சரகனை மாலையாக்கி சவ ஊர்வலம் நடத்திவிட்டாய் !மரித்தவனுக்காக ஒரு சொட்டு கண்ணீர் தரைதொடட்டும் ... 01-Jun-2014 6:42 pm
கொலை மிரட்டலுக்கு பதிலாய் கலையின் கலை திரட்டல்...அருமை சேக்காளி...! முகம் காட்டவோ, முகவரி நீட்டவோ திராணியற்ற யாரோ ஒருவன் / ஒருத்தி உனக்கு எதிரியாய் வர இயலாது...ஏனெனில் உனக்கு எதிரியாவதற்க்கு கூட சில தகுதிகள் வேண்டும்...மற்றபடி இம்மிரட்டல், வாருகையில் வீழும் முடிகளுக்கு சமம். நீ கலக்கு சித்தப்பு ! 01-Jun-2014 6:16 pm
கொலை மிரட்டலுக்கு தங்கள் பதிலடி நச் அண்ணா...! 28-May-2014 4:20 pm
உடலினை விற்றுப் பிழைக்க - இந்த "ஊர்விட்டு ஓடிய பூச்சிகள் விடமென வார்த்தைகள் வீசி - என் விடியலை அழிக்குமாம்!.. சிரிப்பு !" கடலினை விற்றும் காசுபார்க்க அலையும் கூத்தாய் திரியும் கூட்டம்..! கரையின் ஓரம் வந்தால் கூட வாரிச்சுருட்டும் கலையின் கவிதை..! கவலை கொள்ள கலையும்கூட சவலைக் குழந்தை எனும் நினைப்பு எவளுக்கோ..எவனுக்கோ இருந்தால் ஐயோ..பாவம்.அவருக்காய் சற்று அழுதிடுவோம்.., விரைவில் மனநலம் பெறவும் வாழ்த்திடுவோம்..! 20-May-2014 9:37 pm
R.Nirosh - கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2014 9:34 pm

பாரதி வள்ளுவன் புகட்டியப் பாடங்கள்
====மீறினாய் - குறை கூறினாய் !
சாரதி இல்லாத ஊர்தியைப் போலவே
====ஓடினாய் - இடர் தேடினாய் !

மண்பாட்டு மறந்து மகிமை துறந்து
====பறந்தாய் - ஊரை மறந்தாய் !
பண்பாட்டு ஒழுக்கம் பழக்க வழக்கம்
====மாற்றினாய் - ஊறு போற்றினாய் !

கடலைத் தாண்டியும் காமத்தைக் காவியே
====ஆடினாய் - நோயில் வாடினாய் !
கடவுளைத் தேடியும் காசைத் தேடியும்
====முக்கினாய் - துயரில் சிக்கினாய் !

சாதிகள் மதங்கள் பேதங்கள் வன்முறை
====ஓதினாய் - முட்டி மோதினாய் !
நீதிகள் வேதங்கள் யாவையும் பாலையாய்
==== ஆக்கினாய் - வெறிப் போக்கினாய்!

ஆடையில் பாடையில் அறத்தை மீறியே
====பொங்கி

மேலும்

தம்பியின் வார்த்தைகளில் தமிழின் பெருமை! மிகவும் அருமை! 10-Jul-2014 8:12 am
பாராட்ட வார்த்தைகளே இல்லை படைப்பு மிக மிக அருமை அண்ணா...! 28-May-2014 4:22 pm
சமுக சீர்கேடுகளைச் சொன்னவிதம் அருமை தோழரே! 17-May-2014 6:56 am
அருமை தோழரே 17-May-2014 2:12 am
R.Nirosh - kirupa ganesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2014 8:20 am

(புற்று நோயால் அவதியுறும் ஒருவரின் ஆழ்ந்த உணர்வுகள் )

"ஆன்கொன்" வைரசின்
ஆக்கிரமிப்பால்
அணு அணுவாய் சிதைகின்றோம் !

கதிர்வீச்சின் தாக்கம்
காயத்தை உலுக்குகின்றது

கர்ம வினையோ !
காலத்தின் கட்டாயமோ !

இறப்பின் உறுதியை
அறிந்ததால்
வலிகளிருந்து விடுதலை பெற
வேண்டுகோள்

எங்களை கருணை கொலை
செய்து விடுங்கள் !!

விரோதிக்கும் இந்த
நிலை வரக்கூடாது

மரணமும் ஒரு வாழ்க்கை தான்
முடிவில் ஏற்படும் நிகழ்ச்சியை
முன்னதாக்கி விடுங்கள் ...

நடை பிணமாக
வலிகளால் வேதனைகளால்
வாழ முடியாமல் சிதையும்
எங்கள் நலத்திற்காக
எங்களை
கருணை கொலை செய்து விடுங்கள்

தயவு செய்து ...

மேலும்

நன்றி 13-May-2014 7:56 am
மரணமும் ஒரு வாழ்க்கை தான் முடிவில் ஏற்படும் நிகழ்ச்சியை முன்னதாக்கி விடுங்கள் ... நல்லதொரு வரிகள் .. சிந்திக்க வைக்கும் வரிகள் .. 13-May-2014 6:44 am
ஆம் ஜவஹர் 08-May-2014 10:06 pm
இயற்கையை செயற்கை வெற்றி கொண்டதாக மார்தட்டிக் கொள்கின்றது.அனால் இயற்கை அதனைப் பார்த்து புற்று நோயாய்ச் சிரிக்கின்றது.கவிதையைவிட சொல்ல வந்த விடயம் மனதைக் காயப்படுத்திவிட்டது தோழமையே! 08-May-2014 10:00 pm
R.Nirosh - துறைவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2014 9:03 am

*
சித்திரைப் பௌர்ணமி
சொக்கன் சொக்கி கல்யாணம்
தரிசனம் செய்தாள் கன்னிப்பெண்.
*
குடிநீர் பற்றாக்குறைப் போக்கும்
அவசர ஆலோசனைக் கூட்டத்தில்
கலந்துக் கொண்டன யானைகள்.
*
உடல் ஆரோக்கியக்கிய முகாம்
கோடை உணவு குறிப்புகள்
வாசித்துச் சிரித்தன பறவைகள்.
*
மின்வெட்டுப் பிரச்சினைக்குத்
தீர்வுக்கான அறிக்கை சமர்ப்பித்தது
மின்மினிப் பூச்சிகள்.
*
சின்னச் சின்னதாய் சிவந்து
வெயில் கட்டிகள்
துடித்து அழுகிறது குழந்தை.
***

மேலும்

நன்றி நண்பரே.. 03-May-2014 6:45 pm
நன்றி றண.பரே... 03-May-2014 6:45 pm
நன்று நண்பரே 03-May-2014 1:44 pm
மிக அருமை அன்பரே ! 03-May-2014 12:29 pm
R.Nirosh - துறைவன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 9:03 am

*
சித்திரைப் பௌர்ணமி
சொக்கன் சொக்கி கல்யாணம்
தரிசனம் செய்தாள் கன்னிப்பெண்.
*
குடிநீர் பற்றாக்குறைப் போக்கும்
அவசர ஆலோசனைக் கூட்டத்தில்
கலந்துக் கொண்டன யானைகள்.
*
உடல் ஆரோக்கியக்கிய முகாம்
கோடை உணவு குறிப்புகள்
வாசித்துச் சிரித்தன பறவைகள்.
*
மின்வெட்டுப் பிரச்சினைக்குத்
தீர்வுக்கான அறிக்கை சமர்ப்பித்தது
மின்மினிப் பூச்சிகள்.
*
சின்னச் சின்னதாய் சிவந்து
வெயில் கட்டிகள்
துடித்து அழுகிறது குழந்தை.
***

மேலும்

நன்றி நண்பரே.. 03-May-2014 6:45 pm
நன்றி றண.பரே... 03-May-2014 6:45 pm
நன்று நண்பரே 03-May-2014 1:44 pm
மிக அருமை அன்பரே ! 03-May-2014 12:29 pm
R.Nirosh - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 12:39 am

ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க
காடு கரையில் வேலை செஞ்சு
கல்வி அறிவு தந்தவங்க
காலமெல்லாம் கஷ்டப்பட்டும்
கண்ணீர் மட்டும் மிச்சமாச்சு

பொத்தி பொத்தி வளர்த்திடவே-தினம்
செத்து செத்து பிளைச்சாங்க
ஆறு பேர பெற்றும் கூட
ஆறுதலா யாருமில்லை
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க

ஆறு பேரும் படிச்சு முடிச்சு
தேசாந்திரம் போகத் துடிச்சு
அநாதையானா கதைய கேளுங்க
அடிமை பிழைப்பாள் அவதிதானுங்க
ஒத்துமையா உழைக்கவேனுங்க
பெத்தவங்கள மதிக்க வேணுங்க

அன்னையவள் நோயின் பிடியில்
அப்பனவன் வறுமைப் பிடியில்
பிள்ளையெல்லாம் அடிமை பிடியில்
மெத

மேலும்

கருத்துக்கு நன்றி ! 08-May-2014 7:42 pm
உறைக்கணும் உண்மை....மலரணும் நன்மை....அருமை அய்யா.... 08-May-2014 7:07 pm
வாருங்கள் தோழா வரவுக்கு நன்றி 08-May-2014 6:57 pm
இலட்ச ரூபாய் சம்பாதித்தாலும் அது அடிமை வேலைதான்! 08-May-2014 5:01 pm
R.Nirosh - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 9:45 am

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

காத்திருந்து காத்திருந்து காலமெல்லாம் பார்த்திருந்து
கல்லாகி போனோமே கண்திறந்து பாருமைய்யா
உள்ளாரும் செல்லாகி மண்மீது வீழும்முன்
நல்லாட்சி நல்கிடுவாய் நீ

மேலும்

மிக்க நன்று ! 03-May-2014 12:21 pm
வெண்பா கருத்து வெகு சிறப்பு. நல்லாட்சி என்பது காணும் கானல் நீராகும் கண் பார்ப்பதும் வேறாகும் காத்திருப்பதே நம் செயலாகும். 03-May-2014 11:26 am
அருமை அய்யா ... 03-May-2014 11:07 am
அருமை நட்பே....! 03-May-2014 11:02 am
R.Nirosh - arsm1952 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 8:42 pm

ஆடை ,அலங்காரங்கள்,
அரு மருந்து ,வாசனைத் திரவியங்கள் ,
அத்தனையும் எதற்கு ?

மேடையிலே, எதுகை, மோனையோடு
ஒன்றுக்கும், உதவாத ,உண்மைக்கு, மாறான
பேச்சும் எதற்கு ?

கூட்டாக நண்பர்கள் கூடியிருந்து,
கும்மாளம் போடுவதும் எதற்கு ?

கட்டுக் கட்டாக பணம் காட்டி
பகட்டாக வாழ்வதும் எதற்கு ?

ஒரு ஜான் வயிற்றிற்கு ,
இரு கை விரல்களும் ,
வாய் ஜால வார்த்தைகளும் ,
செய்யும் வித்தைகளும் எதற்கு ?

கடைசியில்,
ஆறடி மண்ணும்
அருகிருந்து உன்னோடு
உடன் வாராது காண் .

மேலும்

நல்ல வாழ்க்கை தத்துவம் 11-Sep-2014 10:13 am
அருமையானதும் உண்மையானதும் இதுவே ! 03-May-2014 12:19 pm
நன்றாகச் சொன்னீர்கள் தோழரே ! 02-May-2014 3:23 pm
நன்று 02-May-2014 2:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

myimamdeen

myimamdeen

இலங்கை
தாரகை

தாரகை

தமிழ் நாடு
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (14)

s.m.aanand

s.m.aanand

kovai
RATHNA

RATHNA

தூண் & துரும்பு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே