தூறல்-கே.எஸ்.கலை

தீயின் முகவரி -
தொண்டைப் பாதை
ஏழையின் கும்பி !
=+=
கோவில் கட்டினார்கள்
கடவுள் வாழ வைத்தார்
சிற்பிகளை !
=+=
நீதிக்காக லஞ்சம்
நேர்மையின் நிறம்
கருப்பு !
=+=
பாவ வியாபாரம்
புண்ணிய லாபத்திற்கு
உயிர்ப்பலி !
=+=
கற்பழிப்புக் கொலை
நாளைமறுதினம் வழக்கு
நாளை திவசம் !
=+=
ஆறாவதைக்
காணவில்லை-தேடுவது
ஏழாம் அறிவு !

எழுதியவர் : கே.எஸ்.கலை (12-Sep-13, 12:22 am)
பார்வை : 191

மேலே