எரிதழல் ஏந்தி வா!
துரோகத்தின் ஊடே
முறையற்ற பகைமை
அதிகார ஆதிக்க
வர்க வதத்தினை
கொழுத்திட
எரிதழல் ஏந்தி வா!
குருதி துடித்தெழுந்து வா !
அச்சம்தனை தீயலிட்டு வா !!
செந்நெருப்பு மூட்டி வா !!!
திருமேனிதனில் தணல்
மூட்டி தானே
எரிக்கொன்டு
களமாடிடு புலியாய்...
அறமற்று எம்வீடேறி
கொன்றிட்ட வந்தேறிதமை
செந்தழல் மூட்டும்
நெருப்பிற்கு இரையாக்கு...
செந்தமிழ் முழங்க
வீணரவனை பொடியாக்கு...
யாதொரு படை
பின்னுக்கு போகினும் ...
தீதொரு
இடுக்கண் நேரினும்
உடலுக்கு தாமே
கொள்ளியிட்டுக்கொண்டு
தமிழுயிர் தின்றவனை
வென்று வாழும்
செத்தும்,வெல்லும்!!
புலியாய் நீ
எரிதழல் ஏந்தி வா!
சிங்களவன் கொட்டத்தினை
அடக்கி வா!
வேறோடு அறுத்து வா!!
ஏந்திய செந்தீ
புலிவீரம் படிக்கும் !!
தமிழ்மானம் சிறக்கும்...