காத்திருக்கிறேன் உனக்காக

அன்பே
நான் தனியாக நிற்கிறேன்
உந்தன் நினைவுகளை
சுமந்த நிழற்குடையாய்
மலைக்காமல் நிற்கிறேன்
மலைதனில் நனைந்த மதிற்சுவராய்
இருந்தும் இசைபடவில்லை
என்னவளின் திசைகள்!
தினம் வந்த பேருந்து
தேதி மறந்து போனதோ
தெரியவில்லை
என் தேவதையின் வரவுகள்
செலவாகிப் போனதே!
விழிகள் இடறிய வினாடிகள்
எண்ணி எண்ணி காத்திருக்கிறேன்
விடியற்காலையில் உனக்காக!

எழுதியவர் : தர்மா (13-Sep-13, 1:47 am)
பார்வை : 213

மேலே