அறியாமை
பள்ளி செல்லும் பிள்ளை
பொதி சுமக்கும் பிள்ளையாய்
அம்மா என்று அழைக்கும் முன்னே
மம்மி டாடி என்று அழைக்க
ஆங்கில வழி கல்வி போதிக்கும்
பள்ளிகளின் வாசலில் பெற்றோர்கள்
ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில்
பாட சுமை பிஞ்சு கரங்களில் எழுத்தாணி
உடலும் மனமும் வளர்ந்தால் தான்
மழலை கல்வி சிறக்கும்
செய்முறை விளையாட்டு கல்வி தான்
உடலையும் உள்ளதையும் வளப்படுத்தும்
இதை அறியா மக்களை என்னவென்று சொல்ல
ஆரோக்கியமான சூழ்நிலை ஆரோக்கியமான
உணவு இந்த அடிப்படை தேவையை உணர்வார்களா
அறியாமை இருளில் இருந்து மீள்வார்களா
கருத்தரித்த உடனே கல்வி போதிக்கும்
பள்ளிகள் வந்தாலும்
அங்கேயும் கர்ப்பிணி பெண்கள் கூட்டம்
அலைமோதும்
பிறந்தவுடன் காப்பகத்தில் விட்டுசென்றால்
தாய் பாலும் பாசமும் அங்கே கிடைக்குமா
உடலும் உள்ளமும் நலமாக இருக்குமா
நல்ல வேலை கருவை சுமக்க கருவி இல்லை
ஒருவேளை அவ்வாறு இருந்தால்
அதை எப்படி சொல்வது
இவன் இந்த கருவியில் பிறந்தவன்
இவள் அந்த கருவியில் பிறந்தவள்
ஐயோ இதை கற்பனை செய்து பார்க்ககூட
பயமாய் இருக்கிறது
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுக்கு
அன்பையும் அரவணைப்பையும் கொடுங்கள்
மாசற்ற நட்பண்பினை போதியுங்கள்
நல்ல பிள்ளைகளை உருவாக்குங்கள்
கோவை உதயன் -