போலி சாமியார்

கடவுள் என்ற உருவிலே !
பக்தி என்ற பெயரிலே !
காவி என்ற உடையிலே !
மந்திரம் என்ற முறையிலே !
பூஜை என்ற வடிவிலே !
பஜனை என்ற வழியிலே !
பலிகள் என்ற செயலிலே !
பரிகாரம் என்ற வழியிலே !
பிரசாதம் என்ற பொருளிலே !
மக்களை ஏமாற்றிப் பிழைக்கும்
போலிகளை நம்பிப் பிழைக்காமல்
தன்னையே கடவுளாகவும்
தன்னம்பிக்கையையே பக்தியாகவும்
முயற்சியையே பூஜையாகவும்
கொண்டு
உழைத்துபார் ,
போலிகள் எல்லாம்
ஓடி ஒளியும்
புத்தி என்ற
சக்தியை கண்டு !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (14-Sep-13, 11:48 am)
சேர்த்தது : bsrajamaneekam
பார்வை : 105

மேலே