@@@துப்புரவும் நட்புறவும் @@@
மூக்கைபொற்றி ஓடிடுவோம்
===முகம் சுழித்து
முழு உடலோடு மூச்சுமுட்ட
===அடைப்பெடுப்பான்
உயிரையும் பணையம் வைத்து
===உழைத்திடுவான்
நாம் பார்ப்பதென்னவொ
===உதாசீனமாய்
நம்கழிவும் நாம் பார்ப்போம்
===அருவருப்பாய்
அருவருப்பற்று அத்துனையும்
===அகற்றிடுவான்
வீசியெறியும் குப்பையும்,
===காறிஉமிழும் எச்சிலும்
தூக்கி எறியும் தூமையும்
===அகற்றுபவனும் மனிதனென்று
உணர்ந்திடுமோ நம்மனம்
கால்வைக்க கூசும் இடத்திலும்
===கைவைத்து சுத்தம் செய்பவனை
பார்வையிலே அருவருக்க -அவன்
===சித்தம்துடிக்க வாழ்வை வெறுக்க
அணைக்கமுடியா அக்கினி மழையில்
===அம்மனமாய் எரிகிறதென் மனம்
மனிதக்கழிவை மனிதனகற்றும் மனிதமற்ற
===செயல் இங்குமட்டுமே
பெற்ற நாளில்
===தாய் செய்தாள்
வதங்கி விழுந்த நாளில்
===தாரம் செய்தாள்
வாழும் காலமெல்லாம்
===பணியாக செய்யும்
என் மக்களை உதாசினமாக
=== பார்க்கையில்
உள்ளிருந்து வெடிக்குதே
=== மனமென்னும் எரிமலை
கழிவு நீரை ஓட விட்டு
===கண்ட நீரை கலக்கவிட்டு
கண்ணாடியாய் வீட்டை வைத்து கசமாக
===நாட்டை மாற்றும் நம்குல மனிதர்களாலே
கண்ணீர் சேற்றிலே கழியுமோ
===இவர்களின் ஆயுள் காலம்
பயிற்சியும் பாதுகாப்புமாய்
===பணி செய்கிறான் அயல் நாட்டில்
ஒருமுழ கயிற்றிலே பணையம் வைத்து
===பாதளம் செல்கிறான் நம் நாட்டில்
===வீசி எரியும் அத்துணையும்
விடாமல் அகற்றிட அவர்களும்
===சதைமன் பொம்மைகள் அல்லவே
உணர்ச்சியும் உணர்வும் கொண்டு
===உனக்கும் எனக்கும்
மேலான மனிதர்கலன்றோ
===மனதில் கோவில் வேண்டாம்
மனம்கொண்டு குணமோடு
===செயல்பாடு அதுபோதும்
வாசலில் இட்ட எச்சில்
===கோலங்களாய் எண்ணி
ஏழு மையில் தூரம் நின்று
===ஏளனமாய் ஏவும்
மனித வடிவ மனங்களை
===நித்தம் பார்க்கையில்
மூட்டப்பட்ட சிதையில்
===மீண்டு எழுந்து வந்த
அரை பிணங்களாகவே
===தெரிகிறது கண்களில்
பாசத்தோடும் பரிவும்
===காட்ட வேண்டாம் நீ
பாரபட்சம் காட்டாமல்
===பக்குவமாய் பழகு
பாலைவனத்து நிழல்களாய்
===மகிழ்வர் அவர்களும்
...கவியாழினி...