+காதலைக் கற்கப் போனால்...+
கல்லூரி சேர்ந்து நானும்
பாடமே படிக்க வந்தேன்!
எங்கூட படிச்ச நீயோ
காதலைச் சொல்லித் தந்தாய்!
கண்ணாடி பார்க்காத என்னை
கனவாலே மூழ்க டித்தாய்!
முன்னாடி தினமும் வந்து
முழுசாக சாக டித்தாய்!
பள்ளியில் முதலாய் வந்து
பாராட்டுப் பெற்ற நானோ
கள்ளியுன் கடைக் கண்ணாலே
கடைசிவரை தேர வில்லை!
வருடங்கள் மூணும் ஆச்சு!
நொடியிலே ஓடிப் போச்சு!
பருவத்தில் வீழ்ந்த எனக்கு
அரியர்சால் மானம் போச்சு!
மயக்கிய அழகி நீயோ
மறக்காமல் படித்து வந்தாய்!
பல்கலை இறுதித் தேர்வில்
பாவைநீ பதக்கம் வென்றாய்!
உனக்காக அலைந்த என்னை
உதறிநீ விட்டுச் சென்றாய்!
அழகான ஒருவன் பார்த்து
அடக்கமாய் மணந்து கொண்டாய்!
நீயாகக் கெடுக்க வில்லை!
நானேதான் கெட்டுப் போனேன்!
நாயாக உன்னைச் சுற்றி
படிப்பையும் விட்டுப் போனேன்!
தேவதையாய் உன்னைத் தொழுதே
தேவையின்றி மாட்டிக் கொண்டேன்!
வதைக்கின்ற வாழ்க்கை வலையில்
வசமாக சிக்கிக் கொண்டேன்!
என்பெற்றோர் முகத்தில் நானே
கரியையே பூசி விட்டேன்!
கண்கெட்ட பிறகு இன்றோ
மனம்மாறி யோசிக் கின்றேன்!
கல்வியைக் கற்கும் வேளை
கல்வி மட்டும் கற்றிடுவோம்!
காதலைக் கற்கப் போனால்
நல்லப் பாடம் பெற்றிடுவோம்!