எண்களை எண்ணுவோம்

உண்மை - ஒன்று
அதை எதிர்த்தால் பொய் - இரண்டு
அதோடு குழப்பம் சேர்ந்தால் - மூன்று
அதை ஆழமாய் சிந்தித்தால் - நான்கு
மேலும் அதில் பிரச்சனைகளை அறிந்தால் - ஐந்து
தெரியும் வழிகளை ஆராய்ந்தால் - ஆறு
முடிவுக்கு காலம் தள்ளினால் - ஏழு
அதனால் வரும் பாதிப்பு - எட்டு
இறுதியில் தள்ளப்படும் முடிவு - ஒன்பது
'எதற்கு' இவைஎல்லாம் என
எண்ணிப்பார்த்தால் எல்லாம் - பூஜ்யம்
அதுதான்
உண்மை - ஒன்று.

எழுதியவர் : அருள் ராம் (14-Sep-13, 6:21 pm)
சேர்த்தது : arul ram
பார்வை : 65

மேலே