உயரத்தில் இருக்கும் என் நினைவுகளுக்கான சாமரங்கள்
பையனாக இருக்கையில்
பனை ஓலையில் விசிறி செய்து
பாய்ந்து ஓடி மகிழ்ந்தேன்......!
பறந்து திரியும் நினைவுகளுக்கு
இப்போது இதமாக விசிறி விட
காற்றாலைகள் அமைத்தேன்...!
நாளாக நாளாக
கூலாக மாறுகிறேன்.......
நல்லதையே நினைத்து
நாளும் நான் உயருகிறேன்.....!