பிரச்சனைகளை சமாளிக்க - துணிவு வேண்டும்

தும்பிக்கை யானைகள்
தூரத்தில் கட்டெறும்புகள்

துணிவுடன் கையாண்டால்
தூசுகள் பிரச்சனைகள்

நெருங்கட்டும் ஒரு கைபார்ப்போம்
நெத்தியடி நாம் கொடுப்போம்

வெள்ளம் வருமுன் அணைகட்டல் நன்று
ஆனால்
வெறுமனே பயந்தால் பயலே நீ மண்டு.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Sep-13, 12:16 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 147

மேலே